தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுத் தினத்தை முன்னிட்டு த.மா.கா சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பாலக் கரையில் ஜி.கே. மூப்பனாரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் ஜெயக் குமார், மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாநில பொதுக் குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட விவசாய அணித் தலைவர் முருகராஜ், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலர் செந்தில், மாவட்ட ஜி.கே.எம் பேரவை தலைவர் குருமூர்த்தி, ரமேஷ், விவேக் உட்பட பங்கேற்றனர்.