தமிழ் மாநில காங் சார்பில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர், தமிழ் மாநில காங் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசம் உழவர் சந்தை அருகில் ஜி.கே. மூப்பனாரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் நகரத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். பாபநாசம் வட்டாரத் தலைவர்கள் வடக்கு ஜெயக் குமார், தெற்கு சேது ராமன் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்
தலைவர் சேகர், இளைஞரணி நிர்வாகிகள் விஜய், செந்தில், நகரப் பொருளாளர் சேதுராமன், வர்த்தக அணி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போன்று பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பாலக் கரையில் ஜி.கே. மூப்பனாரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் பாபநாசம் வட்டாரத் தலைவர் வடக்கு ஜெயக் குமார், மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜ், பொதுக் குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் செந்தில் குமார், ராஜேஷ், மாவட்டப் பொறுப்பாளர்கள் விவேக், மாஸ்கோ, குஞ்சிதம், வட்டார நிர்வாகிகள் கோகில வாசன், ரெங்கசாமி, செல்வம் உட்பட பங்கேற்றனர்.