தவெக பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை திருவான்மியூரில் தொடங்கியது. இந்த பொதுக்குழுவை ஒட்டி சென்னை நகரம் முழுவதும் தவெகவினர் போஸ்டர்கள் ஒட்டி இரு்நதனர். அதில் ஒரு போஸ்டர் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், புஸ்சி ஆனந்தை வருங்கால முதல்வர் என கூறி உள்ளார். இந்த போஸ்டர் தான் தவெகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மதிப்புமிகு தளபதி அவர்களை பொதுக்குழுவிற்கு அழைத்து வரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான் தவெக பொதுச்செயலாளர்.. வருங்கால தமிழக ‘ முதல்-அமைச்சர் அவர்களே வருக! வருக!! வருக!!! என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கூறுகையில், “அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; வேறு கட்சியை சார்ந்தவர்கள் யாராவது இதை செய்து இருக்கலாம் வேண்டும் என்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்; என்றார்.
புஸ்சி ஆனந்த் கூறம்போது, தவெகவின் சாதாரண தொண்டன் நான். இந்த போஸ்டா விஷமிகள் பார்த்த வேலை என கூறினார்.