Skip to content

வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

  • by Authour

ராஜஸ்தானைச் சேர்ந்த புப்ராஜு சவுத்ரி மற்றும் கமலாதேவி தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்து குஷைகுடாவில் கிருஷ்ணாநகர் காலனியில் வசித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு, கமலாதேவியின் கணவர் புப்ராஜ் சவுத்ரி உடல்நலக்குறைவால் இறந்தார். அப்போதிருந்து, கமலாதேவி கிருஷ்ணாநகர் காலனியில் உள்ள தனது வீட்டில் குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். கமலாதேவி தன் வீட்டின் முன்புறம் இரண்டு கடைகளை வாடகைக்கு வழங்கி அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வருகிறார். இதில் ஒரு இளைஞன் ஒரு கடையை வாடகை எடுத்து கடை வைத்து வந்துள்ளார். வாடகை பிரச்சினை தொடர்பாக கமலா தேவி சமீபத்தில் அந்த இளைஞரைக் கண்டித்தார். அன்றிலிருந்து கோபமடைந்த அந்த இளைஞன், கமலாதேவியை கொல்லத் திட்டமிட்டிருந்தான்.

இதற்காக இந்த மாதம் 11 ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த கமலாதேவியை வீட்டிற்குள் வாடகை தருவதுபோல் சென்று தலையில் அடித்து கொலை செய்து தூக்கு போட வைத்து இறந்ததை உறுதி செய்து பின்னர் கமலாதேவி உடலுக்கு மேல் காலால் மிதித்து நடனமாடுவதை வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி தப்பிச் சென்றான். திங்கட்கிழமை, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குஷைகுடா போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து திறந்தபோது, ​​கமலா தேவி அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, கொலைக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என்பது தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!