நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது .
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை சுமார் 40% குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கடந்த 2022 மே மாதம் முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102- ஐ ஒட்டியும் டீசல் ரூ.94-ஐ ஒட்டியுமே நிலவி வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இவற்றின் விலைகள் உயர்வது வழக்கம். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதிர்ச்சியால் கச்சா எண்ணெய் விலை உடனடியாக கடுமையாக உயர்ந்தது. ஆனாலும், ஜூன் 2022-ல் பீப்பாய் 112 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து இறங்கி, ஜூன் 2023-ல் 73 டாலர் என்கிற அளவுக்கு குறைந்திருக்கிறது. இது சுமார் 40% சரிவு ஆகும். ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறைக்கப்படவில்லை. பெட்ரோல் , டீசல் விலைக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை. அதை எண்ணை நி்றுவனங்கள் தான் நிர்ணயம் செய்கிறது என மத்திய அமைச்சர்கள் கூறி வந்தனர்.
ஆனால் தேர்தல் வந்ததும் சமையல் வாயு விலை குறைக்கப்பட்டது. இப்போது பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு குறைத்து உள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று அதிகாலை முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது. வி்லை குறைக்கப்பட்டதை தொடர்ந்து
ரூ.100-க்கு விற்கப்படும்.