அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, வரதராஜன் பேட்டை பேரூராட்சி,தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வரதராஜன்பேட்டை தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,ஆகிய பள்ளிகளில் 11 – ஆம் வகுப்பு பயிலும் 458 மாணவ, மாணவிகளுக்கு,ரூ.22.05 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) J.சங்கர்,ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன்,வரதராஜன் பேட்டை பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ்,பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ்,துணைத்
தலைவர் எட்வின் ஆர்தர்,தாளாளர்கள் அருட்தந்தை லியோ, அருட்தந்தை பெலிக்ஸ் சாமுவேல்,தாமஸ் லூயிஸ், தலைமையாசிரியர்கள் ஜோஸ்பின்,ஜாக்குலின் இந்திரா,செபாஸ்டின்,மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அந்தோனிசாமி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், அருட்தந்தைகள்,அருட் சகோதரிகள் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்