Skip to content

தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் வல்லம் மாஷா அல்லாஹ் பைத்துல் மால் டிரஸ்ட் ஆகியவை சார்பில் இலவச தையல் பயிற்சி தொடக்க விழா நடந்தது.

நிகழ்ச்சியில் மாஷா அல்லாஹ் பைத்துல் மால் டிரஸ்ட் நிர்வாகி ஏ.எஸ்.ஏ பாஷா வரவேற்றார். முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயலாளரும், தஞ்சை மஹாராஜா சில்க்ஸ் உரிமையாளருமான எஸ். முஹம்மது ரபி தலைமை வகித்து திட்டம் குறித்து விளக்கி

பேசினார். கோட்டாட்சியர் இலக்கியா பயிற்சியை தொடக்கிவைத்தார்.

தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஸ்ரீதர், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், மாஷா அல்லாஹ் பைத்துல் மால் டிரஸ்ட் நிர்வாகிகள் எம்.எம்.ரபீக், எஸ்.எம்.அன்ஸாரி, எ.ஏ.பாஷா, இன்ஜினியர் அப்துல் ஹக், சிக்கந்தர், ஷேக்தாவூத், எம்.எம்.இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 40 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் அகமது கபீர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தினர் மற்றும் வல்லம் மாஷா அல்லாஹ் பைத்துல் மால் ஆகியோர் செய்திருந்தனர்.

error: Content is protected !!