Skip to content
Home » ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுகாக தனது புல்லட்டை சர்வீஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. புல்லட் சர்வீசுக்கு அண்ணாதுரை சரிவர பணம் தரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சீனிவாசனுக்கு போன் செய்த எஸ்எஸ்ஐ அண்ணாதுரை பாலமேடு ஸ்டேஷனில் பணியாற்றும் காவலர்களின் டூவீலரை சர்வீஸ் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். சரியாக பணம் தராத காரணத்தினால் அண்ணாதுரையின் போனை மெக்கானிக் சீனிவாசன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை, கடந்த 4ம் தேதி சீனிவாசனின் மெக்கானிக் கடைக்குச் சென்று அவரை மிரட்டியதோடு போனை எடுக்கமாட்டியா? என கூறி கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவானது. பின்னர் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை மெக்கானிக் சீனிவாசனை அறையும் காட்சி வைரலானது. இது தொடர்பாக மெக்கானிக் சீனிவாசன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதன் அடிப்டையில் நேற்று எஸ்எஸ்ஐ அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.