கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
வெங்கமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது வீட்டு செல்லப் பிராணிகளை அழைத்து வந்து, இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.