Skip to content

பொதுத்தேர்வு எழுதும் 14,766 மாணவருக்கு இலவச வினா-விடை .. அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்படி இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளை எழுதும்14, 766 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அனைத்து பாடங்களும் அடங்கிய வினா விடை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் 130 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு , தமிழ் மற்றும் ஆங்கிலம் வாயிலாக, 10 வகுப்பு பயிலும் 8105 மாணவ மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் வினா விடை வங்கி புத்தகங்களும், பிளஸ் 2 பயிலும் 6656 மாணவ மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வரலாறு, உயிரியல், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் முதலிய பாடங்களில் வினா விடை வங்கி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக  நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர கலந்து கொண்டனர்.