பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து இலவச சர்க்கரை நோய், இருதய நோய் மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நடந்த முகாமில் டாக்டர்கள் கார்த்திக்கேயன், ராகுல்யா, லோகேஸ்வரன் உள்பட 200 க்கும் மேற்பபட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம், எக்கோ, இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் கிங்ஸ் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் தம்பி முகம்மது இப்ராகிம், செயலர் முருகன், பொருளாளர் முகம்மது பாரூக், ஆனந்த் காந்தி உட் பட பங்கேற்றனர்.