Skip to content
Home » திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது – மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா பேட்டி

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
சார்பில் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில்
டெல்டா பகுதியில் முதல் முறையாக”Apollo Health Check on Wheels” நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம்”அறிமுகப்படுத்தியது. அதைத் தொரடர்ந்து காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்த திட்டமிட்டது.
நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம்”வாகனத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா துவக்கி வைத்தார்.

24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் காவல்துறையினர் மற்றும் அவர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை ஆணையர் சத்தியபிரியா வழிகாட்டுதலின்படி அப்போலோ சிறப்பு மருத்துமனையானது காவல்துறையினுக்கான இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமினை இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடத்துகிறது.
இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், ஜி.எம்.ஆப்ரேஷன் சங்கீத் மற்றும் அப்போலோ குடும்பங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து  கமிஷனர் சத்தியப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:

காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம் ஆகையால் முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம்.

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் பொய்யானது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *