கரூர் வடிவேல் நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாமினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா துவங்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் கலந்துகொண்ட தனியார் மருத்துவமனை மருத்துவர் 5 வயது குழந்தைகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும் அதேபோன்று 40 வயதை கடந்தவர்கள் கண் வீக்கம் ஏற்படும் அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி கண்டிப்பாக கண்ணாடி அணிய வேண்டும் என அறிமுகப்படுத்தினார். கரூர் மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பேசுகையில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் நேரத்திற்கு உணவு உட்கொள்ளாததால் பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாவதாகவும் இதிலிருந்து பாதுகாக்க நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும் காவலர்கள் பணி நிமித்தமாக நேரத்திற்கு உணவு உட்கொள்ளாத முடியாது நிலையில் பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாவதாகவும் அதனை சரி செய்வதற்கு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். பொது மருத்துவம், கண் சிகிச்சை செய்து கொண்டனர்.