Skip to content
Home » வரும்15ம் தேதி 1000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்

வரும்15ம் தேதி 1000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்திவருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும, இந்த முகாம் நடத்தப்படுகிறது. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன..இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!