ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில், இஸ்லாமியர்களுக்கு ரமலான் கிட் வழங்கும் விழா மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசி அமைச்சர் செந்தில் பாலாஜி; தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின், நமக்கான நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை மக்களாகிய நீங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களோடு உங்களுக்காக குடும்பத்தில் ஒருவனாகவும், சகோதரனாகவும் தம்பிகளாகவும் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்களுடன் பயணித்து உறுதியாக உங்களுக்குத் தேவையானவைகளை நிறைவேற்றி தருவோம் எனவும் பேசினார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் பிரியாணி அரிசி, , மளிகை பொருட்கள், நெய் அடங்கிய இலவச ரமலான் கிட் சிறப்பு தொகுப்புகளை வழங்கி
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
