கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் நடந்த முகாமில் மருத்துவக் குழுவினர் 200 பேருக்கு மேல் பரிசோதனை மேற்க் கொண்டனர். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 85 பேர் அறுவைச் சிகிச்சை மேற்க் கொள்ள மதுரை அழைத்துச் செல்லப் பட்டனர். இதில் லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் பழனியப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர் துரைசாமி, தலைவர் சந்தோஷ், செயலர் ராமச் சந்திரன், பொருளாளர் லெட்சுமணன், வட்டாரத் தலைவர் ஆனந்தன், முன்னாள் தலைவர் நாச்சியப்பன் உட்பட பங்கேற்றனர்.