புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .ஐஸ்வர்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.