தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்தது. இதை தற்போது 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.