பாஜக எம்எல்ஏ நயினார் நாகேரந்திரனின் மகன் நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை – விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் நயினார் பாலாஜி பத்திரப்பதிவு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை பத்திரப்பதிவுத்துறை ரத்து செய்துள்ளது.
இந்த உத்தரவை ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் பிறப்பித்துள்ளார். நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக நயினார் பாலாஜி இயங்கி வருகிறார். அவர் மோசடி செய்தது உறுதியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது.