திருச்சி மாவட்டம், முசிறி 9வது தெரு பார்வதிபுரம் கணக்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (63). தொழிலதிபர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
நான் முசிறி புதிய பஸ் நிலையம் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் சிட்ஸ்பண்ட் நிறுவனத்தில் ரூபாய் 20 லட்சம் சீட்டில் சேர்ந்து.
பின்னர் 18 மாதங்கள் எனது சீட்டுக்கான தொகையை தவறாமல் செலுத்தி வந்தேன். பின்னர் 19வது சீட்டு ஏலத்தின் போது எனது சீட்டை திருச்சி தலைமை அலுவலகம் சென்று 2023ம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏலத்தில் எடுத்தேன்.
அப்போது எனக்கு தர வேண்டிய தொகை ரூபாய் 18 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.ஆனால் அந்த சீட்டு தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
பின்னர் கடைசியாக திருச்சி தலைமை அலுவலகம் சென்று அதன் உரிமையாளரிடம் கேட்டபோது. மேலும் இரண்டு மாத சீட்டுத் தொகையை கழித்துக் கொண்டு ரூபாய் 16 லட்சத்தை 82,000 தருவதாக ஒப்புக்கொண்டனர் ஆனால் அதன்படி பணத்தை திரும்ப தரவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பணத்தை தராமல் கடைசியாக ரூபாய் 4 லட்சத்து 87 ஆயிரத்து மட்டும் சிறுசிறு தொகையாக கொடுத்து வந்தனர்.பின்னர் மீதமுள்ள 11 லட்சத்து 95 ஆயிரம் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டனர்.
பின்னர் முசிறி அலுவலகத்திற்கு சென்று கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தில்லை நகர் பகுதியை சேர்ந்த அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் முசிறி கிளை மேலாளர் ஊழியர்கள் 3 பேருக்கு தொடர்புள்ளது. அவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.