மோசடிகளும், திருட்டுகளும் தினந்தோறும் ஒவ்வொரு விதத்தில் நடக்கிறது. ரூம் போட்டு யோசிப்பாங்களாடா என வடிவேல் பேசும் வசனம் போல, மோசடிப்பேர்வழிகளும் ரூம் போட்டு த்தான் யோசிப்பார்கள் போல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ரவி (63)என்ற நபர், ஒவ்வொரு நகரமாக சென்று அந்த பகுதி முக்கிய பிரமுகர்களின் போன்களுக்கு தொடர்பு கொண்டு, நான் எம்.எல்.ஏ. பேசுகிறேன், அமைச்சர் பேசுகிறேன் என குரலை மாற்றி பேசி பணம் பறித்து வந்துள்ளார். ஒவ்வொருவரிடமும் லட்சகணக்கில் பணத்தை ஆட்டய போட்டுள்ளார்.
இந்த நபர் குறிப்பாக ஈரோடு,திருப்பூர், கோவை ஆகிய பகுதி முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார்.எம்எல்ஏ,அமைச்சர் போல் பேசி ஆள் மாறாட்டம் செய்து குறிப்பிட்ட கணக்குகளுக்கு பணத்தை அனுப்பும்படி கூறி லட்சகணக்கில் பணம் பறித்து உள்ளார்.
பணத்தை இழந்த நபர்கள் இது தொடர்பாக ஈரோடு சைபர் கிரைம் போலீசில் மூன்று புகார்கள் பதிவானது.
புகாரை தொடர்ந்துF :20/2024 U/s.66(D) IT Act 2000 r/w 419, 420 IPC வழக்கு பதியப்பட்டு, சம்மந்தப்பட்ட குற்றவாளியை சைபர் கிரைம் போலீசார் தேடிவந்தனா்.
குற்றவாளியின் மொபைல் நம்பர் மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ஸ் அப் எண் ஆகியவற்றை ட்ராக் செய்த போலீசார் சமை்பந்தப்பட்ட நபர் தற்போது திருச்சியில் இருப்பதாக கண்டறிந்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த நபரை பிடிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி போலீசார் விரைந்து சென்று அந்த நபரை லபக்கென பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரவி என தெரிய வர அவரிடம் விசாரணை நடத்திய ஈரோடு சைபர் கிராம் போலீசார் ரவியை கைது செய்து, அவரிடம் இருந்த இரண்டு செல்போன், மூன்று சிம் கார்டுகள் முக்கிய பிரமுகர் அடங்கிய விபரங்களை பறிமுதல் செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.