திருச்சி வாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (34 ).இவர் அவசர தேவைக்காக தனது காரின் ஆர்.சி புக்கை ரமேஷ் என்பவரிடம் அடமானமாக வைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் கடனாக பெற்றார். பின்னர் அதற்கு உண்டான வட்டியும் சேர்த்து ரூ. 1.76 லட்சத்தை திருப்பி செலுத்தினார். பின்னர் ஆர்.சி புக்கை கேட்டபோது அவர் திரும்ப கொடுக்கவில்லை. பின்னர் விசாரித்த போது கிருபாகரனின் காரை முகிலன் என்பவருக்கு
விற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிருபாகரன் தில்லை நகர் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் ரமேஷ், முகிலன் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு… போலீஸ் விசாரணை..
திருச்சி தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் நேற்று அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிய வந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிரேசிமேரி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இறந்த நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.