கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர்.சண்முகநாதன், கனகவல்லி சண்முகநாதன் ஆகியோரால் கங்கா மருத்துவமனை நிறுவப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனை உருவாக காரணமாக இருந்த நிறுவனர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற Founder’s Oration விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு Reimagining Health & Care for New India” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் கூறுகையில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். மேலும் மருத்துவ சிகிச்சையில் ஏ ஐ-யின் (செயற்கை நுண்ணறிவு) முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இவ்விழாவில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், கங்கா மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், பல்வேறு தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.