Skip to content
Home » பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும் பயிரிடப்படும் ஒரு பருவ பயிறும் பொய்த்துப் போன காரணத்தினால் வேதனைகள் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள். இது குறித்த செய்தி தொகுப்பு.

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பளூர் ஆகிய இரு ஒன்றியங்கள் டெல்டா பகுதிகளாகும். கொள்ளிடம் ஆற்றில் இருந்து உருவாக்கப்பட்ட வரத்து வாய்க்கால்களான நந்தியாறு, புள்ளம்பாடி வாய்க்கால், பொன்னாற்று பாசனம் வாய்க்கால் மற்றும் மழையை நம்பி உள்ள சுத்தமல்லி நீர்த்தேக்க பாசனம் மற்றும் பொன்னேரி பாசனம் ஆகியவைகளின் மூலம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாயம் சம்பா, குருவை, தாளடி ஆகிய பருவங்களில் பயிரிடுவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக காவிரியாற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் அதன் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றிலும் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் அரியலூர் மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வரத்து வந்து அதன் உபரியான கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான தண்ணீர் போனாலும் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள் விதை நெல்லை விதைக்கு கூட வழியின்றி வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

அண்டையில் காவேரி… மூழ்க மாட்டாளாம் மூதேவி… என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கிராமத்தில் அருகாமையில் உள்ள காவிரி ஆற்றில் அவ்வளவு தண்ணீர் ஓடினாலும் அதில் சென்று குளிக்க மாட்டாள் மூதேவி என்பது பழமொழியின் விளக்கம் இதற்கு தகுந்தார் போல் இந்த வருடம் கொள்ளிடம் ஆற்றில் பல டி என் சி தண்ணீர் சென்று கடலில் வீணாக கலந்தாலும் பொன் நாட்டில் தண்ணீர் வராத காரணத்தினால் 6000 ஏக்கர் விளைநிலங்கள் பாழ்பட்டு கிடைக்கின்றன. பொன்னாற்று தலைப்பில் தூர்வாராதது வழிநெடுக்கிலும் உள்ள ஆகாயத்தாமரை அடர்த்தி கோரைப்புற்களின் வளர்ச்சி கருவ மரங்கள் புதூர் போல் அண்டி கிடப்பது ஆகிய காரணங்களால் கொள்ளிடத்தில் அதிக தண்ணீர் சென்றாலும் பொன்னாற்று பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாமல் போய்விட்டது. ஆண்டுதோறும் ஆடி மாதம் கொள்ளிடத்தில் தண்ணீர் வரும்பொழுது அதன் வாய்ப்பு உபரி வாய்க்காலான பொன்னாற்று வாய்க்காலிலும் ஐந்தில் இருந்து பத்து நாட்களுக்குள் தண்ணீர் வரத்து இருக்கும். தண்ணீரை நம்பி கடை வெள்ளியில் தங்களது பருவப் பயிரான சம்பா ரக விதைகளான 1509 பொன்னி கோ 59 ஆடுதுறை 51 உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிடுவது வழக்கம் 160 நாள் பயிரான இந்த நெல் ரகங்கள் தமிழர்களின்

பொங்கல் பண்டிகையை ஒட்டி அறுவடைக்கு தயாராக இருக்கும். இந்த ஒரு பவ பயிர் மட்டுமே ஒரு வருடத்திற்கு விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் இந்த சம்பா ரக பயிர் ஒன்னாற்றில் தண்ணீர் இல்லாததாலும் மழை பெய்யாத காரணத்தினாலும் முற்றிலும் பொய்த்துப் போய் உள்ளது. சில இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வந்ததை பார்த்த விவசாயிகள் ஏக்கருக்கு உணவுக்கு 3000 விதை நெல்லுக்கு 1500 விதைத்த கூலி 500 என சுமார் 5,000 க்கு மேல் செலவு செய்து காத்திருந்தோம் அடிக்கின்ற வெயிலால் முளைத்து கூட வர முடியாத மாபெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
தமிழக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு பொன்னாற்று வாய்க்காலை தூர் வார இருந்தால் தங்களுக்கு இந்த சங்கடங்கள் இருந்திருக்காது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி பொன்னாற்று வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் கொடுப்பதன் மூலமே விவசாயிகளின் வாழ்க்கை மலரும். அரசை நம்பி காத்திருக்கின்றனர் இந்த பகுதி விவசாயிகள். அடுத்த ஆண்டிற்காவது திட்டமிட்டு முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா என்பதை இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!