பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் 6000 நிதியானது மூன்று சம தவணைகளில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும் இகேஒய்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலிய மங்களம் பொது சேவை மையத்தில் விவசாயிகள் தங்கள் இகேஒய்சி அப்டேட் செய்வதை வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை பால சரஸ்வதி ஆய்வுச் செய்தார். இதன் பின்னர் சாலியமங்கலம் தபால் நிலையத்திற்கு சென்று அங்கும் அப்டேட் செய்வதைப் பார்வையிட்டார். தொடர்ந்து அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அட்மா திட்ட பணிகளை ஆய்வுச் செய்தார்.