தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில் போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 19ஆம் நாளான சுதந்திர தினமான இன்று நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தலையில் முக்காடிட்டு மத்திய, மாநில
அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் சென்று கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் தாங்கள் முக்காடு போட்டுக் கொண்டிருந்த கருப்பு துணிகளை காவல்துறையினரும் ஒப்படைத்தனர்.