தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, திரு ஆருரான் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டி நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலையை மூடிவிட்டனர். விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடனை வாங்கிக் கொண்டு, விவசாயிகளை கடனாளியாகி விட்டனர். தற்போது கால்ஸ் நிறுவனம் ஆலையை வாங்கி உள்ளது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனையை புதிய நிர்வாகம் தீர்க்கவில்லை. பழைய ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்கவில்லை, விவசாயிகள் பேரில் வங்கியில் வாங்கிய கடன் தொகையும் செலுத்த மறுத்து வருகின்றனர். விவசாயிகளை கடனாளியாக தெருவில் நிறுத்தி உள்ளனர். விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் தொகையை மாநில அரசு, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயரில் மாற்றிவிட்டு, விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மாநில அரசு பெற்றுத்தர வேண்டும் என் மனம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.