திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா மணகுண்டு, நடுத்தெருவைச் சேர்ந்தர் ரவி( 53). இவர் விவசாயி.
இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கலில் மன உளைச்சலில் இருந்த ரவி மெலட்டூர் அருகே கள்ளர் நத்தத்தில் உறவினர் வீட்டுக்கு சென்றவர் அங்கு 1 ம் தேதி விஷத்தைச் சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், ரவியை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி நேற்று இறந்தார். ரவியின் உறவினர்கள் ரவியின் இறப்பிற்கு காரணமானவர் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்க கோரி பாபநாசம் போலீஸ் நிழற்குடை அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதித்தது. பாபநாசம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட்டனர்.
