திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா வரவேற்பு உரை ஆற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி தலைமை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
உளுந்து மற்றும் எள் சாகுபடி அவசியம் குறித்தும், சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும், நாளாந்தா வேளாண்மை கல்லூரி பேராசிரியர் குணா சிறப்புரை ஆற்றினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கௌசிகா மற்றும் ஸ்வேதா பயறு வகை பயிர்கள் விதை நேர்த்தி குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார்கள். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் நன்றி உரை ஆற்றினார்.