டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் என்பதை முன்னிட்டு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக 36 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்கி தவணை தவறாது கடனை திரும்ப செலுத்தியும் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை மல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயி கோ. விஜயகுமார் வீட்டு தோட்டத்தில் அழைத்து பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. “தேசிய விவசாயிகள் தினம்” முன்னிட்டு விவசாயிகளுக்கு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சால்வை அணிவித்து விவசாயிகளை கௌரவித்தது பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பார்கள் APN ஜவுளி உரிமையாளர்கள் ,CVR மண்டி உரிமையாளர்கள், அரியலூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், விவசாய சங்க தலைவர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி குறித்து மல்லூர் விவசாயி விஜயகுமார் கூறுகையில்… விவசாயிகள் விவசாய கடன் பெற்று திரும்ப வங்கியில் கடனை கட்டமுடியாத சூழல் வரும்போது வங்கியின் அணுகுமுறை நீதிமன்றங்களில் விவசாயிகள் பெயரில் வழக்கு தொடர்வது, விவசாயிகள் பொருள்களை கைய்யகப்படுத்துவது, விவசாயிகளை “நாணயம் தவறியவர்கள்” என்று வங்கி முன்பு விவசாயிகள் புகைப்படங்களை வைப்பது போன்ற செயல்கள் விவசாயிகள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் விதம் மிகவும் வருத்தம் அளித்தது. இந்த நிலை
விவசாயிகள் காரணம் இல்லை, அரசியல் கட்சிகள் கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு தவறான வழிகாட்டு தலால் வங்கிகளுக்கு வரக் கடனாக மாறிவிடுகிறது இதனால் ஒரு முறை வங்கியில் கடன் பெற்று கடன் தள்ளுபடி வரும் என்று விவசாயிகள் கடனை திருப்பி செலுத்துவதில்லை. இந்த மனநிலையில் இருந்து விவசாயிகள் மாறவும் மீண்டும் மீண்டும் வங்கி கடன் பெற்று விவசாயிகள் வாழ்வாதரத்தை மே ம்படுத்த விவசாயிகள் பெற்ற வங்கி கடனை தவணை தவறாமல் திருப்பி செலுத்திய விவசாயிகளை பாராட்டி, கௌரவித்தது, நினைவு பரிசு வழங்கி “நாணயமானவர்கள்” என்று போற்றப்படும் போது விவசாயிகள் வாழ்வாதாரமும், வங்கியும் ,வளர்ச்சி பெறும் நம் தேசமும் வளர்ச்சி பாதையில் செல்லும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று கூறினார்.