அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். விவசாய மின்மோட்டாருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மின்சார அலுவலகம் முன்பாக மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து காந்தி பூங்காவில் இருந்து புறப்பட்டு ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று உதவி செயற்பொறியாளர் அலுவலர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் மனு அளித்தார்.
மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
- by Authour
