மயிலாடுதுறை மாவட்டம், மங்கை நல்லூர்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையம், யூனுஸ் (தொழில்நுட்ப அலுவலர்),(சென்னை) பிரபாகரன் தொழில்நுட்ப அலுவலர் (பெங்களூரு), போயா தொழில்நுட்பம் அலுவலர் (பெங்களூர்) தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். ஆய்வின் போது மாவட்டஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், உடனிருந்தனர்.