தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50 மரக்கன்றுகளும், தனி பயிராக சாகுபடி செய்திட ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகளை பெற்றுச்செல்லும் விவசாயிகள் தங்கள் வயலில் நட்டு, பாதுகாத்து வளர்த்து வர வேண்டும். இந்த மரக்கன்றுகளுக்கு ஆண்டுக்கு ஏழு ரூபாய் வீதம் பராமரிப்பு மானியம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எனவே, இலவசமாக வழங்கப்படும் மரக் கன்றுகளை பெற்றுச்செல்லும் விவசாயிகள் நல்ல முறையில் கன்றுகளை பாதுகாத்து வளர்த்து வர வேண்டும். இதன் மூலம் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கிறது, மேலும் விலை உயர்ந்த மரங்கள் கிடைக்கின்றன, மரங்களினால் இயற்கையும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு பயன்களை கொண்டுள்ள இந்த பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் மரக்கன்றுகளை தவறாது பாதுகாத்து வளர்த்து பயனடையலாம். இத் திட்டத்தில் கீழ் திருவையாறு வட்டாரத்தில் 13,000 மரக் கன்றுகள் விநியோகிக்கப் பட உள்ளன. மேற்க் கண்ட தகவலை திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.