கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி, மேல் சித்திரை சாவடி, தென்னமநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பூமியின் வழியாகவும், நொய்யல் நதிக்கரை மற்றும் ஓரத்தின் வழியாகவும் உயர் மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்ல மின்சாரிய வாரியம் சார்பாக பணிகள் மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில் இதில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்
சு. பழனிசாமி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தார்..மனுவில் உயர் மின் கோபுரம் அமைத்து எந்தெந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதற்கான முழு விளக்கமும் இதுவரை மின்சார வாரியம் அளிக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் பல விவசாயிகளிடம் மின்சார வாரியம் அனுமதி பெறாமல் விவசாய பூமிக்குள் மின்சாரம் செல்ல மின்சார பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், உடனடியாக விவசாய விளை பொருட்களை அப்புறப்படுத்தி தர வேண்டும் என்றும் அலை பேசியில் பல விவசாயிகளை மின்சார அதிகாரிகள் அடிக்கடி மிரட்டி வருகிறார்கள்.
இதனால் திடீரென அமைக்க உள்ள மின்கோபுரத்தால் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்படுவதோடு பல லட்சம் ரூபாய் பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது . அது மட்டுமல்ல தற்பொழுது விவசாய பூமிகளில் பாக்கு, தென்னை, மஞ்சள், வாழை மற்றும் மிளகாய் போன்ற நீண்டகால பண பயிர்களை வைத்திருக்கிறார்கள். அவ்வாறான பயிர்கள் உடனே அகற்றப்படுத்த விவசாயிகளிடம் மின்வாரியம் தெரிவிப்பதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைவதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்..