Skip to content
Home » மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

  • by Senthil

தமிழக அரசின் இலவச உணவு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை கலந்துகொடுக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு வழங்கும் திட்டத்தில் இரசாயனம் கலந்த அரிசியை எந்தவித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல்,

எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உணவோடு கலக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மக்களின் உடல்நலனை பாதுகாக்க கூடிய சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவனி, கருத்தக்காரு உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய அடையாள அரிசிகள் பலவகைகள் உள்ள நிலையில் அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோ சாப்ட், மெட்டா, மெளின்டா பவுண்டேசன் ஆகியவைகளின் செறிவூட்டப்பட்ட அரிசியை உணவு வழங்கும் திட்டத்தில் அனுமதித்தால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!