விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கிட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் திட்டத்தின்கீழ் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் மண்டல அளவிலான வர்த்தக
தொடர்பு பணிமனை கருத்தரங்கம் இன்றும், நாளையும் என இரு தினங்களில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.முருகேசன்,வேளாண்மை இணை இயக்குநர், கு.சரவணன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), எஸ்தர்சீலா, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை மீனாகுமாரி, வேளாண்மை துணை இயக்குநர், விமலா, தோட்டக்கலை துணை இயக்குநர், எஸ்.குமாரகணேஷ், செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் தொழில் நுட்ப கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
திருச்சி விற்பனைக்குழு செயலாளர், சுரேஷ்பாபு, நபார்டு வங்கி DDM மோகன், மற்றும் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு, மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த பணிமனை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறம்பட வழிநடத்த விவசாயிகளுக்கு உரியவிழிப்புணர்வு , தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.
விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, சந்தை ஒருங்கிணைப்பு செய்யும் பொருட்டு (Market Linkage) வல்லுநர்கள் மற்றும் உரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடி உரிய ஒப்பந்தங்கள் போட ஆவன செய்யப்பட்டுள்ளது.
சிறுகுறு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், இடைத்தரகர்கள் செயல்பாட்டை முற்றிலுமாக குறைத்திடவும் வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டங்களை சார்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.