2021ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உ.பி.மாநிலம்லக்கிம்பூர் கேரி வட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, 5 பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானவை. எனவே, இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர். இது திட்டமிட்டு நடைபெற்றது என விசாரணை கமிஷன் கூறிய பிறகும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின்மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராமீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்க மிட்டனர்.
