Skip to content

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் மோகன்குமார், தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கண்டித்தும், விளை பொருளுக்கான லாபகரமான விலை, அரசு கொள்முதல், விவசாயிகள் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகள் ஏற்கப்படாதவை கண்டித்தும், உரமானியம், உணவு மானியம் குறைப்பு, வேளாண்மைத் துறையில் கார்ப்பரேட்டுகளின் தலையீடு, மின்சாரம் தனியாரிடம் ஒப்படைப்பு போன்றவைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து, இதில் பங்கேற்றவர்கள் பட்ஜெட் நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், போராட்டக்காரர்கள் பட்ஜெட் நகல்களை எரிக்க விடாமல் தடுத்தனர். தொடர்ந்து எரிக்கப்பட்ட நகல்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மேகநாதன், விஜய், செந்தில்குமார், லூர்துசாமி டி.ஜி.ரவிச்சந்திரன், துரைக்கண்ணு மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!