தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டத்தின் சார்பில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 70 விவசாயிகள் கல்வி சுற்றுலாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் உணவுக் காளான் வளர்ப்பு, மற்றும் காட்டுப்பன்றி கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் திருமுருகன் காணொளி காட்சி மூலம் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு மற்றும் காட்டுப்பன்றி கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துத்துரைத்தார். காளான் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. காட்டுப்பன்றி கட்டுப்பாட்டுக்காக இந் நிலையத்தில் கண்டறியப்பட்ட ஒரு உயிரியல் காரணி மருந்தின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. காட்டு பன்றியை தடுக்கும் உயிரியல் காரணி மருந்தை தேவைப்படும் விவசாயிகள் அந்
நிலையத்திலேயே வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காளான் வளர்ப்பிற்கு தேவையான காளான் வித்துக்கள் மற்றும் உபகரணங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இந்தச் சுற்றுலாவில் பெரமூர், ஆச்சனூர், சாத்தனூர், மகாராஜபுரம்,மரூர், வளப்பக்குடி, மன்னார் சமுத்திரம், நடுக்காவேரி, திருப்பந்துருத்தி, கீழப்புணவாசல், பெரும்புலியூர், கணபதி அக்கிரகாரம், உள்ளிக்கடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 70 விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் திருவையாறு சுஜாதா, திருவையாறு வட்டார அட்மா மேலாளர் ஜெயபிரபா, உதவி மேலாளர் சாந்தகுமாரி, மங்கலீஸ்வரி, வேளாண்மை உதவி அலுவலர்கள் இளந்திரையன், கவிதா, வெங்கடேசன், ஐஸ்வர்யா, உமா பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.