மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை கேட்டு வங்கி ஊழியர்கள் இரவு 10 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
