Skip to content

ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது, இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31 ம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக்கள் 30க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுக்கள் 50க்கும் மேற்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம்

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது தோட்டத்தில் பத்துக்கும்  மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார், அவர் வளர்த்து வரும் சின்ன கொம்பன்,

வெள்ளை கொம்பன், கொம்பன் 2, கண்ணாவரம் உள்ளிட்ட காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர்  விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் உள்ளவர் குறிப்பாக  ஜல்லிக்கட்டு  ஆர்வலர்.  தற்போது  அவர்  ஜல்லிக்கட்டு  காளைகளுக்கு பயிற்சி அளிக்கும்   வீடியோக்கள் சமூக வலைதளத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் வைரலாகி  வருகிறது

error: Content is protected !!