Skip to content

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் -சகாரிகா தம்பதிக்கு குழந்தை பிறந்தது…

ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். ஜாகீர் கான் கடந்த 2000ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்துவீச்சாளராக அறிமுகம் ஆனார். இவர் 2014ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தனது பங்களிப்பை அளித்தார். குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை வெல்ல ஜாகீர் கான் முக்கிய பங்காற்றினார். இதுவரை 92 போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 282 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு சாகரிகாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் -சகாரிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து ஜாகீர் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆண் குழந்தைக்கு தந்தையான ஜாகீர்கானுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!