நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அதிகளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன. அதில், ஒற்றை கொம்பன் என்று அழைக்கப்படும் யானையும் உள்ளது. சாதாரண யானைகளை விட உயரம் மற்றும் பருமன் அதிகம் கொண்ட இந்த யானை, பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும். இந்த யானைக்கு தற்போது மஸ்து ஏற்பட்டுள்ளதால், கூட்டத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமல் யானை கூட்டத்துடன் ஒன்றாகவே உள்ளது. இந்த வழியாக வரும் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் யானைக் கூட்டத்தை, பார்த்து ரசிப்பதற்கு அருகே செல்லும் நிலையில், மஸ்து ஏற்பட்டுள்ள ஒற்றை கொம்பன் கோபத்தில் தாக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘ ஒற்றை கொம்பன் தலைமை வகிக்கும் யானை கூட்டத்திடம் மக்கள் சிக்கிக் கொள்ளாமல், மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். யானை வந்தால், வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒற்றை கொம்பனுக்கு ‘மஸ்து’ … வனத்துறை எச்சரிக்கை
- by Authour
