கூடலூர் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு வனத்துறையினர் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள் மற்றும் அவை முகாமிட்டுள்ள இடங்களை ரோந்து குழுக்கள் மூலம் கண்டறிந்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். குறிப்பாக, பிதா்க்காடு வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அந்தப் பகுதியில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று யானைகள் நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
யானைகள் நடமாட்டம்… பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை…
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/06/forest-ranger-930x486.jpg)