சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் தோள் பையை சோதனை போட்டபோது அதில் 18 ஆயிரம் சவுதி அ ரேபியா நாட்டின் கரன்சியான ரியால் மற்றும் 7 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகியவை இருந்தது. இவை அனுமதியின்றி கடத்தி வரப்பட்டது என்பதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட வெளிநாட்டு கரன்சிகளின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 48ஆயிரத்து 50 ஆகும். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.