மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் ஏசியா கே28 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி கொண்டு வந்திருந்த ஷோல்டர் பேக்கை திறந்து பார்த்தபோது அதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கத்தை கத்தையாக இருந்தது. அந்த பணத்தை அவர் எடுத்து வருவதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. எனவே அவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கரன்சிகள் விவரம் வருமாறு:
6 ஆயிரம் அமெரிக்க டாலர்(இதன் இந்திய மதிப்பு ரூ.4 லட்சத்து96ஆயிரத்து 200), இந்திய பணம்ரூ.5.5 லட்சம், ( மலேசியன் ரிங்கிட் 1100,(இதன் இந்திய மதிப்பு(18, 997 ரூபாய்) இவற்றின் இந்திய மதிப்பு ரூ. 10.65 லட்சம். தொடர்ந்து அந்த பயணியிடம் விசாரணை நடக்கிறது.