Skip to content
Home » போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியல்.. டாப் 10 யார் யார்?

அமெரிக்க ஊடக நிறுவனமான போர்ப்ஸ் (Forbes) இணையதளத்தில் உலக கோடீஸ்வரர்கள் மற்றும் இந்திய கோடீஸ்வர்கள் தொடர்பான நிகழ்நேர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்திய கோடீஸ்வரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர் ஆகும். இந்திய பட்டியலில் கவுதம் அதானி (அதானி குரூப்) இரண்டாவது இடத்திலும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் (ஜே.எஸ்.டபுள்யூ குரூப்) மூன்றாவது இடத்தி உள்ளனர். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ( 79) நான்காவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 38.4 பில்லியன் டாலர் (ரூ.3.21 லட்சம்) கோடியாகும். அவரைத் தொடர்ந்து இயக்குனர் திலிப் சங்வி (சன் பார்மா), சைரஸ் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட்), குமார் பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), ராதாகிருஷ்ணன் தமானி (அவன்யூ சூப்பர்மார்க்கெட்டுகள், குஷால் பால் சிங் (டி.எ.எப். லிமிடெட்), ரவி ஜெய்புரா (வருண் பெவரேஜஸ்) ஆகியோர் டாப்-10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்..

 

The top 10 richest people in 2024

Name & India Rank Global Rank Net worth (US$) Company
#1 Mukesh Ambani 12 $118.0 B Reliance Industries
#2 Gautam Adani 21 $81.2 B Adani Group
#3 Savitri Jindal & Family 39 $39.9 B JSW Group
#4 Shiv Nadar 41 $38.4 B HCL Technologies
#5 Dilip Shanghvi 58 $29.6 B Sun Pharmaceutical Industries Ltd
#6 Cyrus Poonawalla 79 $24.8 B Serum Institute of India
#7 Kumar Birla 87 $23.5 B Aditya Birla Group
#8 Radhakishan Damani 92 $22.0 B Avenue Supermarkets
#9 Kushal Pal Singh 98 $18.7 B DLF Limited
#10 Ravi Jaipura 108 $17.9 B Varun Beverages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *