Skip to content

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

  • by Authour

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு; வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம்:- ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஒருவேளை உணவு ரூ.10-க்கு வழங்கும் வகையில் ரூ 20 லட்சம் செலவில் அதிநவீன சமையல் உபகரணங்களுடன் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்ட “திருவடி உணவுச் சாலை” யை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்குனி உத்திர திருநாளான இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த உணவுச் சாலையில் வயோதிகர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!