தமிழகத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. 30 தொகுதிகளிலும் 950 பேர் போட்டியிடுகிறார்கள். கடந்த மாதம் 16ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதன்படி ரூ.50 ஆயிரம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவிஜில் செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சத்யபிரதா சாகு தலைமையில் 4-ம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறைகண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், நாளை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.