பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு வரவேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகே உள்ள சித்தனி பகுதியில் ஓடும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுடன் அந்த வெள்ளம் சாலைகளிலும் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக சென்னை- திருச்சி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் 5 கி.மீ. தூரத்திற்கு வரிசைகட்டி நிற்கிறது. திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சில பஸ்கள் மடப்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது.